பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படை துணைத்தளபதியாக ஏர்மார்ஷல் அசுதோஷ் தீக்சித் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:59PM by PIB Chennai
இந்திய விமானப்படை துணைத்தளபதியாக ஏர்மார்ஷல் அசுதோஷ் தீக்சித் 2026 ஜூலை 1 அன்று பொறுப்பேற்றார்.
ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் 1986 டிசம்பர் 6 அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் இணைந்தார். தேசியப் பாதுகாப்பு கல்வி நிறுவனம் பாதுகாப்புப் பணியாளர் பயிற்சிக் கல்லூரி (பங்களாதேஷ்), தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவராகிய இவர், 3,500 மணி நேரத்திற்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவராவார். மிராஜ் 2000, மிக் ரக விமானங்கள், அவ்ரோ, கிரண், ஜாக்வார், தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வகை விமானங்களை இயக்கிய பெரும் அனுபவம் கொண்டவராவார். அத்துடன் சிறந்த விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார். சுமார் 40 ஆண்டு காலமாக பணிபுரியும் அவர், ஆபரேஷன் சஃபேத் சாகர், ஆபரேஷன் ரக்ஷக், கோப் இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் ஆகிய ராணுவ நடவடிக்கைகளிலும் பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தமது பணிக்காலத்தில் பல முக்கிய கள, நிர்வாகப் பொறுப்புகளை ஏர் மார்ஷல் வகித்துள்ளார். மேற்கு பகுதியில் உள்ள முன்னணி போர் விமானப்படைத் தளம், தெற்குப் பகுதியில் உள்ள முதன்மையான போர் பயிற்சித் தளம் ஆகியவற்றுக்குத் தலைமை வகித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279730®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2280058)
आगंतुक पटल : 9