பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவின் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்

प्रविष्टि तिथि: 01 JUL 2026 3:02PM by PIB Chennai

இந்திய ராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவின் தலைமைத்தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் 2026 ஜூலை 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ராணுவ  துணைத்தளபதியாக பொறுப்பேற்றுள்ள சந்தீப் ஜெயினுக்குப் பதிலாக அவர்  இந்தப் பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர், 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 74 ஆர்மர் ரெஜிமென்டில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ராணுவத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். சிந்தூர் நடவடிக்கையின் போது இரண்டு படைப்பிரிவின் தலைமை தளபதியாக செயல்பட்டார்.

கடக்ஸ்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு, ராணுவத் தூதர் என இரண்டு சர்வதேச பொறுப்புகளை ஏற்று பணியாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279816&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2280047) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu