எஃகுத்துறை அமைச்சகம்
மெக்கான் நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:54PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மெக்கான் நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நிதியாண்டுகளாக தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வரும் இந்நிறுவனம், வரிக்கு முந்தைய லாபமாக 2023-24-ம் நிதியாண்டில் 77.62 கோடி ரூபாயும், 2024-25-ம் நிதியாண்டில் 32.08 கோடி ரூபாயும், 2025-26-ம் நிதியாண்டில் 104.53 கோடி ரூபாயும் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு 535.42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மினிரத்னா வகை-1 அந்தஸ்துக்கான தகுதிகளை இந்நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.
இந்த அந்தஸ்து கிடைத்துள்ளதால், மெக்கான் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு கூடுதல் நிதி, நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படும். இதன் மூலம் முதலீடு, நவீனமயமாக்கல், தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் விரிவாக்கத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த இயலும்.
1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ராஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெக்கான் நிறுவனம், நாட்டின் எஃகுத் துறை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. சுரங்கம், உள்கட்டமைப்பு, மின்சாரம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279718®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2280027)
आगंतुक पटल : 9