இந்திய போட்டிகள் ஆணையம்
ஆக்ஸிஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை கேதாரா பேர்ல் ஹோல்டிங், கேதாரா கேபிட்டல் ஃபண்ட் ஆகிய முதலீட்டு அமைப்புகள் வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUN 2026 6:38PM by PIB Chennai
ஆக்ஸிஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை கேதாரா பேர்ல் ஹோல்டிங், கேதாரா கேபிட்டல் ஃபண்ட் IV மாற்று முதலீட்டு நிதி ஆகிய முதலீட்டு அமைப்புகள் வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த முதலீட்டு அமைப்புகள் அனைத்தும் உலகளாவிய கேதாரா குழுமத்தைச் சேர்ந்த நிதிச் சார்ந்த முதலீட்டு பிரிவுகளாகும். பங்குகளை வழங்கும் ஆக்ஸிஸ் பைனான்ஸ் நிறுவனம், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள், வணிக நிறுவனங்களுக்குப் மொத்தக் கடன் வழங்குதல், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நிதியுதவி, சில்லறைக் கடன்கள் வழங்குதல், பல்வேறு காப்பீட்டுகளை விநியோகித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய நிதிச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இது தொடர்பான விரிவான இறுதி ஆணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273668®=3&lang=1
***
SS/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2279734)
வருகையாளர் எண்ணிக்கை : 18