வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தின் 42-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUN 2026 10:39PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தின் 42-வது கூட்டம் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹரியானா முதலமைச்சர் திரு நாயப் சிங் சைனி, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தேசிய தலைநகர் பிராந்தியத்தின் தற்போதைய புவியியல் எல்லையை மாற்றமின்றி அப்படியே தக்கவைத்துக் கொள்ள இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்பிராந்தியத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்கள், நிறுவனங்களின் பங்களிப்புடன் பல்வேறு புதுமையான வழிமுறைகளும் இதில் ஊக்குவிக்கப்படும்.
பிராந்தியத் திட்டம்-2041-ன் கீழ், 'நமோ பாரத்' இரயில் வழித்தடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் நான்கு புதிய பகுதியளவு-பசுமை நகரங்களை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. இவை 'நமோ நகரங்கள்' என்று அழைக்கப்படும். வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்காகப் பழைய பேருந்துகள், லாரிகளுக்கு மாற்றாக புதிய சிஎன்ஜி அல்லது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு 'பரிவர்தன்' எனப் பெயரிடப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273814®=3&lang=1
***
SS/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2279726)
வருகையாளர் எண்ணிக்கை : 19