விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயத்தில் புரட்சி: கால நிலை மாற்றத்தை தாங்கும் ஐசிஏஆர்-ஐஐஓஆரின் விதை பூச்சு தொழில்நுட்பம்
प्रविष्टि तिथि:
18 JUN 2026 1:25PM by PIB Chennai
காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம், நவீன 'ஸ்மார்ட் விதை பூச்சு' தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிர்-பாலிமர்கள் கொண்டு விதைகளுக்குப் பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்படுகிறது. இந்த அடுக்கு, விதைகளுக்குத் தேவையான சத்துக்கள், நுண்ணுயிரிகள், வளர்ச்சி ஊக்கிகளை நேரடியாக வழங்குகிறது. இதனால், விதைகள் விரைவாக முளைப்பதுடன், வறட்சி, பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பைப் பெற்று வலுவான பயிர்களாக வளர்கின்றன.
தெலுங்கானாவில் நிலக்கடலை மற்றும் சோயாபீன் பயிர்களில் நடத்தப்பட்ட சோதனையில், விளைச்சல் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தானியங்கள், பருப்பு வகைகள் என அனைத்து வகையான பயிர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இது விவசாயிகளின் லாபத்தை உயர்த்துவதுடன், நிலையான, பாதுகாப்பான விவசாயத்திற்கு வித்திடுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஐசிஏஆர்-ஐஐஓஆர் பணியாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274497®=3&lang=1
***
SS/VK/PD
(रिलीज़ आईडी: 2279698)
आगंतुक पटल : 53