தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 198-வது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 30 JUN 2026 7:35PM by PIB Chennai

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இஎஸ்ஐசி) 198-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தரமான சுகாதாரச் சேவைகளை உறுதி செய்ய இனிவரும் புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளை நேரடியாகக் கழகமே நிர்வகிப்பதற்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மருத்துவச் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் அங்கீகரிக்கப்பட்டது.

சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனை 100 படுக்கைகளிலிருந்து 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும். இதற்கு தேவையான கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிறப்புப் பிரிவுகள் உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஃபரிதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தொழிற்துறை நோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நிர்வாகப் பரவலாக்கம், சேவை விநியோகத்தை மேம்படுத்த மேகாலயா, ராஜ்கோட் உட்பட ஐந்து புதிய துணை மண்டல அலுவலகங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. காப்பீடு செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279526&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2279641) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Gujarati