அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் அடுத்த கட்டப் பொருளாதார வளர்ச்சியை வேளாண் ஆராய்ச்சி-தொழில்துறை இடையிலான கூட்டு முயற்சி முன்னெடுத்துச் செல்லும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:41PM by PIB Chennai
அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் கூடுதல் மதிப்பை உருவாக்குவதன் வாயிலாக, வேளாண் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான வலுவான கூட்டாண்மை, இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்–இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் (CSIR-IICT) நான்கு மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளைத் திறந்து வைத்து, 200 மாணவர்களுக்கான நவீன விடுதி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், டாக்டர் ஜிதேந்திர சிங் விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வேளாண் துறை தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான, இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் அறிவியல் முன்னுரிமைகள் விரிவடைந்துள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பயிர் மேம்பாட்டையும் கடந்து, வேளாண் கழிவுகள் மற்றும் எஞ்சிய பொருட்களை மதிப்புமிக்க தயாரிப்புகளாக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
விவசாயக் கழிவுகள் மற்றும் எஞ்சிய பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது வரை அறிவியல் ரீதியான முயற்சிகள் இப்போது விரிவடைந்துள்ளன என்றும், இதன் மூலம் விவசாயிகள், தொழில் துறை மற்றும் பொருளாதாரத்திற்குப் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279440®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2279631)
आगंतुक पटल : 5