சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த திட்டம்: மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:42PM by PIB Chennai
மத்திய சுகாதார, குடும்ப நலக் கவுன்சிலின் 16-வது கூட்டத்தில், குழந்தைகளின் ஆரோக்கியம், ஆரம்பகால வளர்ச்சி மேம்பாட்டிற்காக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் குழந்தைகள் நலச் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், பிறந்தது முதல் 36 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தொடர்ச்சியான பராமரிப்புக்கு தேசிய அளவில் இந்த ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், "முதல் மூன்று ஆண்டுகள் முழுமையான கவனிப்பு" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும்.
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் போன்ற பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள குழந்தைகளுக்குத் தீவிரக் கண்காணிப்புடன் சிறப்புப் பராமரிப்பு அளிக்கப்படும். ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள் ஒருங்கிணைந்து இந்தச் சேவைகளை வழங்குவர். ஆரம்பகாலக் குறைபாடுகளைக் கண்டறிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் மாதாந்திர சிசு முகாம்களும் நடத்தப்படும். இச்சேவைகளைக் கண்காணிக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279075®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279230)
आगंतुक पटल : 10