சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புலிகள் மறுஅறிமுகம் குறித்த தேசியப் பயிலரங்கம் ராஜஸ்தானின் ஆல்வாரில் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:17PM by PIB Chennai
“புலிகள் மறுஅறிமுகம்: வாய்ப்புகளும் சவால்களும்" என்ற தலைப்பிலான தேசியப் பயிலரங்கம் ராஜஸ்தான் ஆல்வாரில் இன்று நிறைவடைந்தது. இந்த பயிலரங்கை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நேற்று (28.06.2026) தொடங்கி வைத்தார்.
புலிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவியல் பூர்வமான தேசிய அளவிலான கட்டமைப்பை உருவாக்குவது குறித்து இப்பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 முதன்மை வனவிலங்குப் பாதுகாவலர்கள், 18 கள இயக்குநர்கள் பங்கேற்றுத் தங்களின் கள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தொழில்நுட்ப அமர்வுகளில் புலிகளின் எண்ணிக்கையை நிர்வகித்தல், இரைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வாழ்விடங்களை மீட்டெடுத்தல் போன்ற முக்கிய உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில வனத்துறைகளுடன் இணைந்து புலிகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சில குறிப்பிட்ட புலிகள் காப்பகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக அளவில் கண்டங்களுக்கு இடையேயான முதல் பெரிய மாமிச உண்ணி மறுஅறிமுகத் திட்டமான ‘சிவிங்கிப்புலி திட்டம்’ வெற்றியின் மூலம் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279065®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279208)
आगंतुक पटल : 9