சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய ஆரோக்கியமான இந்தியாவே அடிப்படை: மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா பேச்சு
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:01PM by PIB Chennai
மத்திய சுகாதார, குடும்ப நலக் கவுன்சிலின் 16-வது மாநாடு மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர், ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற இலக்கை அடைய ஆரோக்கியமான இந்தியாவே அடிப்படையாகும் என்றார். கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். நாடு முழுவதும் சுமார் 1.85 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மகப்பேறு இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ள சாதனைக்கு மாநிலங்களின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் அவசரக்கால மருத்துவப் போக்குவரத்து சேவைகளுக்கான ‘தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் 2026’ வெளியிடப்பட்டன. குழந்தைகள் பராமரிப்பிற்கான ஒருங்கிணைந்த திட்டம், மேம்படுத்தப்பட்ட ‘ரத்த சோகை இல்லாத இந்தியா இயக்கம்’ போன்ற முக்கியத் திட்டங்களையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279056®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279126)
आगंतुक पटल : 6