புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

20-வது புள்ளியியல் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த வெளியீடுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 29 JUN 2026 5:00PM by PIB Chennai

தேசிய அளவில் நீடித்த வளர்ச்சிக்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புப் பணிகளை எளிதாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், நிதி ஆயோக், ஐ.நா. முகமைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இதன்மூலம் கொள்கை உருவாக்கம், திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வகை செய்கிறது. கொள்கை உருவாக்கம், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தேவையான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் 29-ம் தேதியன்று இதற்கான அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த தேசியக் குறியீடுகள் தொடர்பான தரவுகளும் இடம்பெறும்.

இந்த அறிக்கை 17 வகையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கிய தேசிய அளவிலான முன்னேற்றத்தை கண்காணிக்கும் முக்கிய கருவியாக செயல்படுகிறது. மேலும் கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு மதிப்புமிக்க ஆதாரங்களையும் இந்த அறிக்கை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279014&reg=3&lang=1

****

TV/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2279120) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Gujarati , English , Urdu