இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஏவிசி ஆடவர் கைப்பந்து கோப்பை 2026 போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியினரை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 3:07PM by PIB Chennai
ஏவிசி ஆடவர் கைப்பந்து கோப்பை 2026 போட்டியில் நாட்டின் முதலாவது பதக்கத்தை வென்று வரலாறு படைத்த இந்தியக் குழுவினரை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (29.06.2026) பாராட்டினார்.
வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த டாக்டர் மாண்டவியா, “இந்தப் பதக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஆனால் இது ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதனையும் பெரும் பொறுப்பையும் உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டுவருகிறது. நமது விளையாட்டு வீரர்கள் தங்களின் முழுத் திறனையும் உணர்ந்து, சர்வதேச அரங்கில் தொடர்ந்து சிறந்து விளங்க உதவுவதையே அரசின் ஒவ்வொரு கொள்கையும், ஒவ்வொரு முதலீடும், ஒவ்வொரு முயற்சியும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
ஏவிசி ஆண்கள் கைப்பந்து கோப்பை என்பது ஆசியாவின் முதன்மையான வருடாந்தர கண்ட அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டியாகும். 2026-ம் ஆண்டு போட்டி, இந்தியா இப்போட்டியை முதல்முறையாக நடத்திய நிகழ்வாக அமைந்ததுடன், நாட்டின் விளையாட்டு வரலாற்றில் மற்றொரு முக்கிய அத்தியாயத்தையும் சேர்த்தது.
ஜெரோம் வினித் சார்லஸ் தலைமையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வீரர்களைக் கொண்ட இந்திய தேசிய அணியும், செர்பியாவின் பயிற்சியாளர் டிராகன் மிகைலோவிச்சும் இன்று காந்திநகரில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.
நீண்டகாலத் திட்டமிடல், அகாதமி மேம்பாடு, திறமையாளர்களைக் கண்டறிதல், விளையாட்டு அறிவியலை அதிக அளவில் பயன்படுத்துதல், விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் ஒரு வலுவான விளையாட்டுச் சூழலை மோடி அரசு உருவாக்கி வருகிறது என்று வீரர்களிடையே உரையாற்றிய டாக்டர் மாண்டவியா கூறினார்.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பஹ்ரைனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்ற அந்த அணி, ஏவிசி ஆண்கள் கைப்பந்து கோப்பை வரலாற்றில் இந்தியாவின் முதல் பதக்கத்தையும் மிகச்சிறந்த இடத்தையும் பதிவு செய்தது.
அணியின் சார்பாகப் பேசிய கேப்டன் ஜெரோம் வினித் சார்லஸ், மத்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278936®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2279117)
आगंतुक पटल : 6