சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதாரத்துறையின் ஆரோக்கிய சேது 2.0 உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 4:57PM by PIB Chennai
நாட்டின் சுகாதார சேவைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் டிஜிட்டல் சுகாதார சேவைகளின் பயன்பாட்டை விரைவுபடுத்தும் வகையிலும் டிஜிட்டல் சுகாதாரத் திட்டங்களை அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு ஜெ. பி. நட்டா இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் திரு பிரதாப் ராவ் ஜாதவ், திருமதி அனுப்பிரியா படேல், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் எம் சீனிவாஸ், திரிபுரா மாநில முதலமைச்சர் டாக்டர் மாணிக் ஷாகா, மத்தியப்பிரதேச துணை முதலமைச்சர் திரு ராஜேந்திர சுக்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டிஜிட்டல் முன்முயற்சிகளில் ஒன்றான ஆரோக்கிய சேது 2.0 ஆயுஷ்மான் செயலி, ஆயுஷ்மான் சாரதி வாட்ஸ்அப் சாட்பாட், தேசிய சுகாதார உரிமைப் பரிமாற்றம், காப்பீட்டுத் திட்டங்களுக்கான செயலி உட்பட பல்வேறு செயலிகள் ஆகியவை இதில் அடங்கும்.
தேசிய சுகாதார ஆணையம், மின்னணு சுகாதாரப் பதிவு தளங்களுக்கான தேசிய வள மையம் ஆகியவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் சேவைகள், நாட்டின் சுகாதார பாதுகாப்புச் சூழல் அமைப்பு முழுவதையும் தடையின்றி தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கு வழிவகுப்பதுடன் செயல் திறன், சுகாதார சேவைகளை எளிதில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அமையும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருவதாக கூறினார்.
டிஜிட்டல் புத்தாக்கத்தின் மூலம் ஆரோக்கயமான தேசத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று குறிப்பிட்டார் திரு ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279006®=3&lang=1
****
TV/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2279098)
आगंतुक पटल : 13