பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைப்பகுதி சாலை அமைப்பின் பிரமாங்க் திட்டம் தனது 16-வது அமைப்பு தினத்தைக் கொண்டாடுகிறது.
प्रविष्टि तिथि:
29 JUN 2026 2:49PM by PIB Chennai
எல்லைப்பகுதி சாலைகள் அமைப்பின் பிரமாங்க் திட்டம், இந்தப் பகுதியில் உத்திசார் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு மேம்பாட்டிற்காக ஆற்றிய பதினைந்து ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க சேவையைக் குறிக்கும் வகையில், தனது 16-வது அமைப்பு தினத்தை 2026 ஜூன் 29 அன்று அருணாச்சல பிரதேசத்தின் ராணாகாட்டில் கொண்டாடியது. இந்தத் திட்டம், அருணாச்சல பிரதேசத்தின் சியாங், கிழக்கு சியாங், மேற்கு சியாங், மேல் சியாங், ஷி-யோமி மாவட்டங்களிலும், அசாமின் தேமாஜி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உத்திசார் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பாகும்.
சிறு பாலங்கள் முதல் பெரிய எஃகு, வளைவுப் பாலங்கள் வரை 811 கி.மீ. நீள சாலைகள், ஏறத்தாழ 86 பாலங்களின் பராமரிப்பு, மேம்பாட்டுப் பொறுப்பை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. அலாங்–யிங்கியோங் சாலையில் உள்ள சியோம் நல்லாவின் மீது கட்டப்பட்ட 100 மீட்டர் எஃகு வளைவுப் பாலம், சிமாங் நல்லாவின் மீது கட்டப்பட்ட 165 மீட்டர் அழுத்தம் தாங்கும் கான்கிரீட் பாலம் ஆகியவை இதன் முக்கியப் பொறியியல் சாதனைகளில் அடங்கும்.
16-வது அமைப்பு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தலைமையகம், பணிப்படை இடங்களில் பல்வேறு சமூக நலப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் குறிக்கவும், வீரர்களிடையே தோழமையை வளர்க்கவும் ராணுவமாநாடுகள், படைவீரர் கலந்துரையாடல்கள், மாபெரும் விருந்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278921®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2279018)
आगंतुक पटल : 13