வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தெலங்கானாவில் அம்மாநில மக்களின் பங்கேற்புடன் நகர்ப்புறங்களில் தூய்மை பராமரிப்புப் பணிகள்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 1:46PM by PIB Chennai
மக்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக தூய்மைப் பணியையும் மாற்றுவதன் மூலம், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தை தெலங்கானா மாநில அரசு மேம்படுத்தி வருகிறது.
100 நாட்களுக்கு தகவல், கல்வி, மக்கள் தொடர்பு போன்ற பிரச்சாரங்களின் மூலம், தூய்மை, பொது சுகாதாரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உள்ளூர் சமூக அமைப்புகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன.
சுகாதாரத் துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், உலகின் மிகப்பெரிய முன்முயற்சியாக நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான மக்களின் மனப்பான்மை, நடைமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நகர்ப்புற மக்களிடையே தூய்மை குறித்த உணர்வையும், தூய்மையைப் பராமரிப்பதனால் ஏற்படும் பெருமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள் இல்லாத சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் இந்த தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278895®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2278966)
आगंतुक पटल : 15