சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம், குடும்ப நல மன்றத்தின் 16-வது மாநாட்டில் இன்று தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் 2026-க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா வெளியிடவுள்ளார்.
प्रविष्टि तिथि:
29 JUN 2026 10:50AM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நல மன்றத்தின் 16-வது மாநாட்டில் இன்று தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் 2026-க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா வெளியிடவுள்ளார். சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆம்புலன்ஸ் சேவைகளைத் தரப்படுத்துவதற்கும், அவசர மருத்துவப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகின்றன.
மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முந்தைய பராமரிப்பு, நோயாளியின் நிலையைச் சீராக்குதல், பாதுகாப்பான போக்குவரத்து, உரிய நேரத்தில் பொருத்தமான சுகாதார வசதிகளுக்குப் பரிந்துரைத்தல் ஆகியவற்றை வழங்கும் ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை தொடரின் முக்கியமான முதலாவது இணைப்பாகும். இந்தச் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் சேவைகளின் தரம், அணுகல், செயல்திறன், சிகிச்சை திறனை உறுதி செய்ய சீரான தரநிலைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்கள், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் கண்காணிப்பு, அழைப்புப் பதிவு அமைப்புகள், கட்டமைக்கப்பட்ட வகைப்படுத்தும் நெறிமுறைகள், நிகழ்நேர செயல்திறன் தகவல் பலகைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் அனுப்பும் மையங்களை நிறுவுவதை ஊக்குவிக்கும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆம்புலன்ஸ் சேவைகளை ஒருங்கிணைந்த அவசரகால சிகிச்சை எண்ணான 112 உடன் படிப்படியாக ஒருங்கிணைப்பதையும் இவை ஊக்குவிக்கும்.
தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் 2026-க்கான செயல்பாட்டு வழிகாட்டுதல் வெளியீடு, இந்தியாவின் அவசரகால மருத்துவ சேவை வழங்கும் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278749®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2278945)
आगंतुक पटल : 7