கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் “பாரத் டாக்ஸி”சேவையை ஜூன் 27 அன்று தொடங்கி வைக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 26 JUN 2026 8:31PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2026 ஜூன் 27 அன்று குஜராத் மாநிலம் காந்திநகரில், நாட்டின் முதல் கூட்டுறவு துறை அடிப்படையிலான  "பாரத் டாக்ஸி" சேவையைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தச் சேவை குஜராத்தில் 2025 டிசம்பரில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், போக்குவரத்து மற்றும் இயக்கம் சார்ந்த துறையில்  பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவு மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

பாரத் டாக்ஸி என்பது கூட்டுறவுத் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு டிஜிட்டல் போக்குவரத்துத் தளமாகும்; இது ஓட்டுநரே உரிமையாளர் என்ற கோட்பாட்டிற்கு வடிவம் கொடுக்கிறது. இந்த முறையின் கீழ், டாக்ஸி ஓட்டுநர்கள் வெறும் சேவை வழங்குநர்களாக மட்டுமின்றி, இத்தளத்தின் பங்கேற்பாளர்களாகவும் உரிமையாளர்களாகவும் திகழ்கின்றனர். இதன் மூலம் அவர்கள் பொருளாதார மேன்மை, சமூகப் பாதுகாப்பு மற்றும் உரிமையாளர் அந்தஸ்து ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி, மத்திய அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சக செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி, குஜராத் அமைச்சர் திரு ஜிதுபாய் சவ்ஜிபாய் வகானி ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்பார்கள். இவர்களுடன் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாரத் டாக்ஸி  நிறுவனத்துடன் இணைந்துள்ள 4,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியின்போது, சிறந்த ஓட்டுநர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்  பரிமாறிக் கொள்ளப்படும்.

குஜராத்தின் 14 முக்கிய நகரங்களான அகமதாபாத், சூரத், துவாரகா, வதோதரா, ராஜ்கோட், சோம்நாத், வல்சாத், ஆனந்த், ஜாம்நகர், பாவ்நகர், நதியாத், ஜுனாகத், மெஹ்சானா மற்றும் அம்ரேலியில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கப்படும். அடுத்த ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் இந்தத்  திட்டத்தை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2278302&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2278370) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Punjabi , Telugu