சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
அழியும் நிலையில் உள்ள அரிய உயிரினங்களை அறிவியல் பூர்வமாக அடையாளம் கண்டு, அறிவிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை தேசிய பல்லுயிர் ஆணையம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
26 JUN 2026 6:40PM by PIB Chennai
நாட்டில் பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தேசிய பல்லுயிர் ஆணையம், 2002-ம் ஆண்டு பல்லுயிர் சட்டத்தின் 38-ம் பிரிவின் கீழ் அழியும் நிலையில் உள்ள அரிய உயிரினங்களை அறிவிப்பதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறையானது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அறிவித்தல் ஆகியவற்றுக்கு ஒரு சீரான, வெளிப்படையான, அறிவியல் பூர்வமான வலுவான செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா, வளமான பல்வேறு தாவரங்கள், விலங்குகள், சூழல் மண்டலங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாகும். இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, அதீத சுரண்டல், மாசுபாடு, ஆக்கிரமிப்பு அயல் இனங்கள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. சூழலியல் சமநிலையைப் பேணுவதற்கும், சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக பல்லுயிர் வளத்தை உறுதி செய்வதற்கும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பது இன்றியமையாதது.
2002-ம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் 38-ம் பிரிவானது, சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் கலந்தாலோசித்து, அழிவின் விளிம்பில் உள்ள அல்லது எதிர்காலத்தில் அழியும் வாய்ப்புள்ள எந்தவொரு உயிரினத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினமாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மத்திய அரசு இந்த அதிகாரங்களை மாநில அரசுகளுக்கும் வழங்கலாம். இதுவரை, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம், 17 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 159 தாவர இனங்களையும் 173 விலங்கு இனங்களையும் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களாக அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278271®=3&lang=1
(Release ID: 2278271)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278293)
आगंतुक पटल : 13