உரங்கள் துறை
பசுமை யூரியா உற்பத்திக்கான செயல் திட்டத்தை அரசு ஆராய்ந்து வருகிறது
प्रविष्टि तिथि:
26 JUN 2026 2:13PM by PIB Chennai
நிலையான வேளாண்மை, கரியமில வாயு சமநிலை, தொழில்நுட்பத் தன்னிறைவு ஆகியவற்றை நோக்கிய ஒரு மாபெரும் மாற்றத்தைக் குறிக்கும் வகையில், உரங்கள் துறை, இந்தியாவில் பசுமை யூரியா ஆலைகளை நிறுவுவது தொடர்பான கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, உரங்கள் துறையின் இணைச் செயலாளரும், பிடிஐஎல் பொதுத்துறை நிறுவனத்தின் தலைவருமான இயக்குநருமான டாக்டர் கே.கே. பதக் தலைமை வகித்தார்.
இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவில் பசுமை யூரியா ஆலைகளை நிறுவ உரங்கள் துறையால் அழைப்பு விடுக்கப்பட்டது. நொய்டாவில் உள்ள பிடிஐஎல் தலைமையகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டம் தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கியது. இந்த முயற்சியை எதிர்காலத்தில் நனவாக்குவதில் சம்பந்தப்பட்ட அனைவரின் தீவிர அணுகுமுறைக்கு இது ஒரு தெளிவான அறிகுறியாகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, யூரியா உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திட்டங்கள், இந்தியாவின் பருவநிலை இலக்குகளுக்கு ஆதரவளிப்பதோடு, உர, எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தும். தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்க கட்டமைப்பின் கீழ் உள்ள ஆதரவைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த பசுமை யூரியா திட்டங்களை உருவாக்க முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278167®=3&lang=1
(Release ID : 2278167)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278240)
आगंतुक पटल : 12