சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் மற்றும் பதிவு விதிமுறைகளில் திருத்தங்களை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 26 JUN 2026 12:39PM by PIB Chennai

வெளிப்படையான, திறமையான, வணிகத்திற்கு உகந்த ஒரு ஒழுங்குமுறைச் சூழலை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, சுகாதார, குடும்ப நல அமைச்சகம், 2006-ம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், 2011-ம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயத்தில், உணவு வணிகங்களுக்கு உரிமம் வழங்குதல் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது.

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு வணிகங்களுக்கான உரிமம் - பதிவு) திருத்த ஒழுங்குமுறைகள், 2026 மூலம் அறிவிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், உணவு வணிகங்களுக்கான இணக்கத் தேவைகளை முறைப்படுத்துகிறது.

 

இந்தத் திருத்தம், உணவுத் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும், விளைவு சார்ந்த ஒழுங்குமுறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட அமைச்சகத்தின் பரந்த ஒழுங்குமுறை சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளில், உணவு வணிகங்களுக்கான இணக்கத்தை எளிதாக்குவதற்காக பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உணவு வணிக அமைப்பைச் சேர்ந்த தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு இந்தச் சீர்திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278119&reg=3&lang=1

(Release ID: 2278119)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2278208) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali