பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தேசிய நல்லாட்சி இணையவழி கருத்தரங்குத் தொடரின் 37-வது இணையவழி கருத்தரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2026 7:37PM by PIB Chennai
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்படும் பிரதமரின் விருதுகளை வென்றவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள செய்வதன் மூலம் அத்தகைய சிறந்த நடைமுறைகளை மேலும் பரவலாக்கவும் மற்ற இடங்களில் செயல்படுத்தவும் வழிவகுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் காணொலி வாயிலான மாநாடுகள் அல்லது இணையவழி கருத்தரங்குகளை நடத்துமாறு, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 ஏப்ரலில் அறிவுறுத்தியிருந்தார்.
அந்த வகையில் 37-வது தேசிய நல்லாட்சி இணையவழி கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில், 'சிறந்த பொது நிர்வாக செயல்பாட்டிற்கான பிரதமர் விருது' பெற்ற மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் முன்முயற்சி, 'பிரதமரின் விருது பெற்ற முன்முயற்சிகளின் நிலைத்தன்மை மற்றும் மறு உருவாக்கம்' என்ற கருப்பொருளின் கீழ் எடுத்துரைக்கப்பட்டது.
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த இணையவழி கருத்தரங்கில், துறையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தியா முழுவதும் 640-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகச் சீர்திருத்தத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான களப்பணியாளர்கள் உடன், மத்திய மற்றும் மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277970®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2278062)
வருகையாளர் எண்ணிக்கை : 45