குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்எஸ்எம்இ தினம்-2026 நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 25 JUN 2026 7:44PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஜூன் 27 அன்று நடைபெறவிருக்கும் 'எம்எஸ்எம்இ தினம் 2026- தொழில்முனைவோர் இந்தியா' விழாவிற்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில் அத்துறைக்கான அமைச்சர் திரு ஜிதன் ராம் மாஞ்சி, இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி ஆகியவற்றில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 27 அன்று எம்எஸ்எம்இ தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் துறையை வலுப்படுத்த டிஜிட்டல் தளங்களைத் தொடங்கி வைத்து, இ-புத்தகங்களையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிடுகிறார்.

இதன் கீழ் பிஎம்இஜிபி 2.0, சமாதான் 2.0, பிஎம்எஸ், எம்எஸ்எம்இ குளோபல் மார்ட் 2.0, எம்எஸ்எம்இ சோதனை இணையதளம் ஆகிய புதிய இணையதளங்களும், 'எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 6.0' என்ற புதிய முன்முயற்சியும் தொடங்கிவைக்கப்படவுள்ளன. தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கைவினைக்கலைஞர்களின் வெற்றிக் கதைகளை உள்ளடக்கிய காஃபி டேபிள் புத்தகமும் இந்த விழாவில் வெளியிடப்படவுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277980&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2278060) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati