விவசாயத்துறை அமைச்சகம்
உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நீட்டிப்பு, 6.18 லட்சம் ஊரக வீடுகளுக்கு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2026 5:49PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான், உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத்துடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் காலம் ஜூலை 8 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது கோதுமை, கொண்டைக்கடலை மற்றும் பருப்பு விவசாயிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையும்.
மேலும், பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் ஏழை மக்களுக்காக 6,18,482 புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்காகச் குறுகிய கால பயிர்களை ஊக்குவிக்கும் அவசரகாலத் திட்டங்களை உருவாக்கவும், மாநிலத்திற்கான நீண்டகால அறிவியல் பூர்வமான வேளாண்மை வரைபடத்தைத் தயார் செய்யவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வலுவான விவசாயிகள் மற்றும் வளமான கிராமங்களே நாட்டின் இலக்கு என அமைச்சர் சவுகான் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277879®=3&lang=1
செய்தி அடையான எண்:2277879
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2278057)
வருகையாளர் எண்ணிக்கை : 40