இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மை பாரத் சார்பாக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விநாடி வினாப் போட்டி

प्रविष्टि तिथि: 25 JUN 2026 6:17PM by PIB Chennai

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு  தினத்தை முன்னிட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், 'எனது இளம் இந்தியா' (MY Bharat) மூலம், நாடு தழுவிய அளவில் ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்’ பிரச்சாரத்தின் கீழ், 2026 ஜூன் 26 அன்று மை பாரத் இணையதளத்தில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விநாடி வினாப் போட்டியைத் தொடங்குகிறது. இளைஞர்களிடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையையும் ஊக்குவிப்பது இந்த விநாடி வினா போட்டியின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்காக, 2026 ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை இந்தக் விநாடி வினாப் போட்டி நடைபெறும். சுவாரஸ்யமான டிஜிட்டல் வடிவிலான போட்டியின் மூலம், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல், அதனால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதார விளைவுகள், மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்துப் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் இருந்து சிறந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 2026 ஆகஸ்ட் 14 அன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள 'தேசிய போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் மாநாட்டுடன்'  இந்தத் திட்டம் நிறைவடையும். விருப்பமுள்ள இளைஞர்கள் https://mybharat.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277909&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2278043) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati