பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படை முன்கூட்டிய எச்சரிக்கை & கட்டுப்பாட்டு அமைப்பு 'நேத்ரா': இறுதி செயல்பாட்டு அனுமதி
प्रविष्टि तिथि:
25 JUN 2026 6:08PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரித்த 'நேத்ரா' முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கான இறுதி செயல்பாட்டு அனுமதி சான்றிதழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) இந்திய விமானப்படையிடம் வழங்கப்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி கலந்துகொண்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆரம்பக்கட்ட அனுமதிக்குப் பிறகு, தற்போது இந்த முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் பாலகோட் தாக்குதல்களின் போது 'நேத்ரா' அமைப்பின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை துணைத் தளபதி பாராட்டினார்.
டிஆர்டிஓ, விமானப்படை மற்றும் இதர தொழில்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவான இந்த அமைப்பு, இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்புத் தொழில்நுட்பப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகும். இது நாட்டின் வான்வெளி கண்காணிப்பு, சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் போர் மேலாண்மைத் திறனைப் பன்மடங்கு வலுப்படுத்தும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் இது ஒரு முக்கியச் சான்றாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277899®=3&lang=1
செய்தி அடையான எண்:2277899
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2278034)
आगंतुक पटल : 9