PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஒரு தசாப்த கால சுற்றுலா வளர்ச்சி

प्रविष्टि तिथि: 25 JUN 2026 11:30AM by PIB Chennai

சுற்றுலாத்துறை என்பது வெறும் பயணம்பொழுதுபோக்கு சார்ந்த தளம் மட்டுமல்ல. அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேலைவாய்ப்பு உருவாக்கம்கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியத் துறையாகும். ஒரு பயணியின் ஒவ்வொரு பயணமும் ஹோட்டல்கள்போக்குவரத்து அமைப்புகள்சுற்றுலா வழிகாட்டிகள்கைவினைக்கலைஞர்கள்உணவகங்கள்எண்ணற்ற உள்ளூர் சிறு வணிகங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் புதிய மேம்பட்ட வாய்ப்புகளை உருவாக்குகிறது. பார்வையாளர்கள் பல்வேறு புதிய இடங்களை நேரில் ஆராயும்போதுஅவர்கள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பதுடன்புதிய தொழில்முனைவுத் திறனையும் வளர்க்கிறார்கள்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மைகலாச்சார வளம் நிறைந்த நாட்டின் பிராந்தியங்களின் சமச்சீர் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது. இது வேகமாக வளர்ந்து வரும்தொலைதூரப் பகுதிகளில் உள்ள இடங்களுக்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்கிறது. உள்ளூர் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளைத் உருவாக்குகிறது. நாட்டின் துடிப்பான பாரம்பரியம்மரபுகள்இயற்கை எழில் கொஞ்சும் அழகை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது. அதன் பொருளாதார தாக்கத்திற்கும் மேலாககலாச்சார புரிதலை சுற்றுலாத்துறை வலுப்படுத்துகிறது. மக்களுக்கு இடையேயான பிணைப்பை அதிகரிப்பதுடன்உலக அரங்கில் நாட்டின் ஆற்றலை நிலைநிறுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளில்சுற்றுலாத்துறையை ஒரு முழுமையான தொலைநோக்கு அணுகுமுறையுடன் மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடுசுற்றுலாத் தலங்களின் தரம் உயர்த்துதல்டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவை இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் புதிய வேகத்தை அளித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் 50 முக்கிய முதன்மை சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான சிறப்புத் திட்டங்கள் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ளன. இது அந்த இடங்களின் தரம்அடிப்படை வசதிகள்சுற்றுலாத் தயார்நிலையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள்நவீன சர்வதேச விமான நிலையங்கள்உடான் இணைப்புத் திட்டம்அதிவேக வந்தே பாரத் ரயில்கள்ரயில்வே நவீனமயமாக்கல்மிகச்சிறந்த கடைசி மைல் இணைப்பு ஆகியவை பொதுமக்களின் பயணத்தை முன்னெப்போதையும் விட மிகவும் எளிதாக்கியுள்ளன. சுற்றுலாத் தலங்களை மக்கள் எளிதில் சென்றடையக்கூடிய சூழல் நாடு முழுவதும் உருவாகியுள்ளதால்உள்ளூர் சமூகங்களுக்கும் பிராந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அதிகளவில் உருவாகி வருகின்றன.

சர்வதேச அளவில் சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்புதுப்பிக்கப்பட்ட ‘வியத்தகு இந்தியா பிரச்சாரம்’ டிஜிட்டல் விளம்பரங்கள்சர்வதேச பயணச் சந்தைகளில் பங்கேற்புசாலைப்பேரணிகள்கூட்டாண்மை மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் இந்தியாவின் சுற்றுலாத்துறையை உலகளவில் அதிகப் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதோடுநிலையான உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277629&reg=3&lang=1  

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2277962) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati