சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்திய இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையமாக நாக்பூர் விமான நிலையம் மாறும்: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி
प्रविष्टि तिथि:
25 JUN 2026 3:40PM by PIB Chennai
நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தின் நவீனமயமாக்கல், விரிவாக்கப் பணிகள் மத்திய இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நிலப்பரப்பை வலுப்படுத்தும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்தார். நாக்பூர் விமான நிலையத்தைப் பொதுத்துறை-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் ஜிஎம்ஆர் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் சிறப்பு விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றினார். இந்த விழாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேம்படுத்தப்பட்ட இந்தச் சர்வதேச விமான நிலையம் விதர்பா பிராந்தியம் முழுவதும் வர்த்தகம், சுற்றுலா, தளவாடங்கள், சுரங்கத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சர் கூறினார். நாக்பூரிலிருந்து சிங்கப்பூர், துபாய் போன்ற சர்வதேச நகரங்களுக்கு நேரடி விமான இணைப்பை விரைந்து வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய முக்கிய திட்டங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277760®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2277953)
आगंतुक पटल : 7