விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கடல்வழி ஏற்றுமதி நடைமுறை காரணமாக மாம்பழ ஏற்றுமதிக்கான செலவு குறைகிறது
प्रविष्टि तिथि:
25 JUN 2026 5:06PM by PIB Chennai
பழங்கள் ஏற்றுமதியில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய மாம்பழங்கள் கடல் வழியாக வெற்றிகரமாக சிங்கப்பூர் சென்றடைந்துள்ளன. இது சர்வதேச சந்தைகளுக்குக் குறைந்த செலவில், பெருமளவிலான மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
சிங்கப்பூரில் இந்திய மாம்பழங்கள் அவற்றின் சிறந்த சுவை, மணம், தரத்திற்காக மிகவும் மதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பங்கனப்பள்ளி, கேசர் போன்ற மாம்பழ ரகங்களுக்கு, அந்நாட்டில் பெரும் தேவை உள்ளது. ஏற்றுமதியை மிகவும் சிக்கனமானதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றும் வகையில், லக்னோவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், மத்திய வெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து மாம்பழ ஏற்றுமதிக்கான அறிவியல் பூர்வ கடல்வழிப் போக்குவரத்து நடைமுறையை உருவாக்கியுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து 4.3 டன் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன் மூலம் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. விமானம் மூலம் ஏற்றுமதி செய்யும் போது கிலோவுக்கு ரூ. 150 முதல் 250 வரை செலவாகும் நிலையில், கடல்வழிப் போக்குவரத்தில் கிலோவுக்கு ரூ 13 முதல் 20 வரை மட்டுமே செலவாகிறது. இதனால் போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறைந்து, உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு லாபகரமானதாக அமைவதுடன், வெளிநாட்டு நுகர்வோருக்குக் குறைந்த விலையிலும் மாம்பழங்கள் கிடைக்க வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277828®=3&lang=1
(Release ID: 2277828)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277941)
आगंतुक पटल : 15