வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஓமன் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம்: வாரணாசியிலிருந்து ஓமனுக்கு பிஸ்கட் ஏற்றுமதிக்கு ஏற்பாடு

प्रविष्टि तिथि: 25 JUN 2026 4:49PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா), உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து ஓமனுக்கு 40 மெட்ரிக் டன் அளவிலான பிஸ்கட் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா-ஓமன் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) கையெழுத்தான பிறகு, வாரணாசியிலிருந்து ஓமனுக்கு மேற்கொள்ளப்படும் முதல் தொகுப்பு பிஸ்கட் ஏற்றுமதி இதுவாகும். இது கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பை வழங்குகிறது.

வாரணாசியைச் சேர்ந்த ஸ்ரீ திருப்பதி பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது. சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகள் மூலம் இந்த பிராந்திய தயாரிப்புகளின் உலகளாவிய சந்தை வாய்ப்பை அபெடா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்த சரக்குத் தொகுப்பு வாரணாசியிலிருந்து புறப்பட்டு, கான்பூர் உள்நாட்டு கண்டெய்னர் முனையத்தில் சுங்க அனுமதி பெற்றவுடன், ஓமனுக்கு அனுப்புவதற்காக ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவுத் துறைகளில் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277814&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2277940) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu