மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பிரிவு அலுவலர்களுக்கான (நிலை ‘பி’) வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வு, 2025

प्रविष्टि तिथि: 25 JUN 2026 1:42PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால், டிசம்பர் 2025-ல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பிரிவு அலுவலர்கள் (நிலை பி’) வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வின், எழுத்துத் தேர்வு முடிவுகள், 2026 ஜூன் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட பணிப்பதிவு மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான 2025-ம் ஆண்டின் தேர்வுப் பட்டியலில் சேர்ப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதி வரிசைப் பட்டியல் (பிரிவு வாரியாக) வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவு                                                            

பணி

I

மத்திய செயலகப் பணி - பிரிவு அலுவலர் நிலை

III

ரயில்வே வாரியச் செயலகப் பணி - பிரிவு அலுவலர்  நிலை

VIII

புலனாய்வுப் பிரிவு - பிரிவு அலுவலர் நிலை

X

ஆயுதப் படைத் தலைமையக சிவில் பணி – பிரிவு அலுவலர் நிலை

XI

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகம் - உதவி    இயக்குநர் / பிரிவு அலுவலர் / மேலாளர் நிலை-I

 

17 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் (அதாவது, பிரிவு I-ல் 09 பேர், பிரிவு III-ல் 04 பேர், பிரிவு VIII-ல் 01 மற்றும் பிரிவு XI-ல் 03 பேர்) முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பிரிவுகளின் கீழ் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு முடிவு, அது குறித்த அறிவிப்பு ஆகியவை, பணியாளர், பயிற்சித் துறையின் 12.04.2022 தேதியிட்ட அலுவலகக் குறிப்பாணையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடத்திற்கு அருகில் உதவி மையம் ஒன்றைக் கொண்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகள் தொடர்பான தகவல்கள் அல்லது விளக்கங்களை, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையத்தை நேரில் அணுகியோ அல்லது 011-23385271 மற்றும் 011-23381125 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் (www.upsc.gov.in)  காண முடியும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள், அதற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277704&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2277918) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati