சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச பயணிகள் விரைவான குடியேற்ற அனுமதி பெற ஏதுவாக ஏர் சுவிதா 2.0 இணையதளம் வாயிலாக வருகைக்கு 24 மணிநேரம் முன்னதாக உடல்நலம் குறித்த சுய-அறிவிப்பை சமர்ப்பிக்கலாம்

प्रविष्टि तिथि: 25 JUN 2026 12:38PM by PIB Chennai

எபோலா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் பயணிகளை வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதிப்பதற்காக, முக்கிய விமான நிலையங்களில், பொது சுகாதாரக் கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் இணைந்து, மேம்படுத்தப்பட்ட, தொடுதலற்ற 'ஏர் சுவிதா 2.0' என்ற பயணிகள் உடல்நல சுய-அறிவிப்பு இணையதளத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளன.

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா புண்டிபுக்யோ வைரஸ் பாதிப்பை, சர்வதேச சுகாதார விதிமுறைகள் 2005-ன் கீழ் 'சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை' என உலக சுகாதார அமைப்பு கடந்த 17 மே 2026 அன்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது   'புண்டிபுக்யோ வைரஸ் பாதிப்பு' உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காங்கோ, உகாண்டா நாடுகளுடன் எல்லைப் பகுதிகளைக் கொண்ட நாடுகள் (தெற்கு சூடான் உட்பட) வைரஸ் பரவும் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு வருகை தருவதற்கு, பயணிகள் 24 மணிநேரம் முன்னதாகவே ஏர்சுவிதா சுய-அறிவிப்புப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வருகையின்போது, விரைவான குடியேற்ற அனுமதி பெறுவதற்கு ஏதுவாக, பயணிகள் விமானத்தில் அமர்வதற்கு முன்பாக, இணையவழி முன்பதிவு செய்யும்போது, இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை சர்வதேச பயண சுகாதாரப் பிரிவு அல்லது குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிடம் காண்பித்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு, பொது சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து சர்வதேசப் பயணிகளும், தங்களது சுய-அறிவிப்புப் படிவத்தை முன்கூட்டியே, துல்லியமாகப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277648&reg=3&lang=1     

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2277887) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Malayalam