ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புற வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்த தேசியப் பயிலரங்கு: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது
प्रविष्टि तिथि:
24 JUN 2026 8:15PM by PIB Chennai
புதுதில்லி பாரத் மண்டபத்தில் “கிராமப்புற வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் தேசியப் பயிலரங்கை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாளை (2026 ஜூன் 25) நடத்துகிறது. அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கிராமப்புற இந்தியாவின் அடிமட்ட வளர்ச்சித் தேவைகளுடன் இணைப்பதற்கான ஒரு கூட்டுத் தளமாக இந்த ஒரு நாள் பயிலரங்கு அமையும்.
நிதி ஆயோக், இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம், முன்னணி தொழில்துறை ஆலோசனைக் குழுக்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வித்துறையினர் இந்த பயிலரங்கில் பங்கேற்கின்றனர். கிராமப்புற நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் செயற்கை நுண்ணறிவை இணைப்பது குறித்து ஐந்து முக்கிய அமர்வுகளில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
கிராமப்புற மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதற்கும், காலநிலை சார்ந்த ஆபத்துகளைக் குறைப்பதற்கும், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றி இதில் விவாதிக்கப்படும். இளைஞர்களின் திறன் மேம்பாடு, நிதிச் சேவைகளை விரிவுபடுத்துதல், பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கான கொள்கை வழிகாட்டி வரைபடத்தை உருவாக்குவதே இப்பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277563®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277587)
आगंतुक पटल : 9