ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம், 2025-ன் கீழ் ஒருங்கிணைப்புச் கட்டமைப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

प्रविष्टि तिथि: 24 JUN 2026 6:48PM by PIB Chennai

‘வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம், 2025'-இன் கீழ் உள்ள ஒருங்கிணைப்புச் செயல்முறை வரைவு குறித்து அமைச்சகங்களுக்கிடையிலான  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், இன்று புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில் நடைபெற்றது. ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய அரசின் 18 அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அதிகாரிகளும்  கலந்துகொண்டனர். பரவலாக்கப்பட்ட, பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் தலைமையிலான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் கிராமப்புற மேம்பாட்டிற்கான ஒரு முழுமையான அரசு அணுகுமுறையைச் செயல்படுத்தும் சட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப்படுத்துவதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.

 

கூட்டத்தில் பேசிய திரு ரோஹித் கன்சல், ஒருங்கிணைப்பு என்பது வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டத்தின் ஒரு முக்கியத் தூண் என்றும், நீர் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள், உள்கட்டமைப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு போன்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கிராமப்புற மேம்பாட்டு முன்னுரிமைகளைக் கையாள்வதற்கு இது அவசியம் என்றும் வலியுறுத்தினார். இந்தச் சட்டம் "ஒற்றைத் திட்டம் – பன்முக நிதி" என்ற அணுகுமுறையை முன்வைக்கிறது என்றும், இது பல்வேறு திட்டங்களும் செயல்திட்டங்களும் தத்தமது அதிகாரங்களையும், நிதிக் கட்டமைப்புகளையும் தக்கவைத்துக்கொண்டு, பொதுவான மேம்பாட்டு விளைவுகளை நோக்கிச் செயல்பட வழிவகுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277514&reg=3&lang=1

(Release ID: 2277514)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2277572) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Marathi , English , Urdu , हिन्दी , Gujarati , Telugu