பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை கப்பல்களான உதயகிரி, கவரட்டி வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து புறப்பட்டது

प्रविष्टि तिथि: 24 JUN 2026 5:35PM by PIB Chennai

இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய ஃபிளாக் ஆபிசர் ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தாவின் தலைமையில் இயங்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான உதயகிரி, கவரட்டி தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் துறைமுகப் பயணத்தை நிறைவுசெய்து, 2026 ஜூன் 24 அன்று வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்டன.

கிழக்குப் பிராந்திய ஃபிளாக் ஆபிசர் ஹோ சி மின் நகர மக்கள் பிரதிநிதிகள், வியட்நாம் மக்கள் கடற்படையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, கடல்சார் ஒத்துழைப்பு, தொழில்முறை கூட்டுறவு, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். இந்தப் பயணத்தில், ஹோ சி மின் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு, இந்திய கடற்படை கப்பல்களான உதயகிரி, கவரட்டி ஆகியவற்றின் கமாண்டிங் அதிகாரிகளுடன் இணைந்து, அந்த தொலைநோக்குத் தலைவரின் நீடித்த பாரம்பரியத்திற்கு கிழக்குப் பிராந்திய ஃபிளாக் ஆபிசர் மரியாதை செலுத்தினார்.

இந்தத் துறைமுக வருகையின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படை மற்றும் வியட்நாம் மக்கள் கடற்படையின் பணியாளர்கள் பல்வேறு தொழில்முறை கலந்துரையாடல்கள், இருதரப்புப் பயிற்சிகளில் பங்கேற்றனர். இது இரு கடற்படைகளும் தங்கள் செயல்பாட்டு அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான கடல்கள் மீதான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. 12-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐஎன்எஸ் கவரட்டி கப்பலில் ஒரு கூட்டு யோகா அமர்வும் நடத்தப்பட்டது.

 

இந்தப் பயணத்தின் போது, வியட்நாமிற்கான இந்தியத் தூதர், வியட்நாம் மக்கள் கடற்படையின் பிரதிநிதிகள், தூதரக சமூக உறுப்பினர்கள், பிற முக்கிய விருந்தினர்களுடன் ஐஎன்எஸ் உதயகிரி கப்பலில் உபசரிக்கப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277478&reg=3&lang=1

****

TV/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2277544) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati