சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரவ மருந்துகளில் நச்சுப் பொருட்களைக் கண்டறிவதற்கான இரண்டாவது பயிற்சி முகாம்: மத்திய மருந்தியல் ஆணையம் நடத்தியது

प्रविष्टि तिथि: 24 JUN 2026 5:01PM by PIB Chennai

இந்திய மருந்தியல் ஆணையத்தின் காஸியாபாத் வளாகத்தில் வாய்வழியாக வழங்கப்படும் திரவ மருந்துகளில் உள்ள எத்திலின் கிளைக்கால், டைஎத்திலின் கிளைக்கால் ஆகிய நச்சுப் பொருட்களைக் கண்டறிவதற்கான இரண்டாவது செய்முறைப் பயிற்சி முகாமை ஜூன் 22 & 23 ஆகிய நாட்களில் நடத்தியது. மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களின் பகுப்பாய்வுத் திறனை வலுப்படுத்துவதன் மூலம் மருந்துகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து இந்த முகாமின் தொடக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.

ஹரியானா, கோவா, ஒடிஷா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு மருந்து ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெற்றனர். மருந்துகளில் கலக்கப்படும் இத்தகைய நச்சுப் பொருட்கள் சிறுநீரகப் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற தீவிர உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இவற்றைத் துல்லியமாகக் கண்டறிதல் இன்றியமையாததாகிறது.

வாய்வழியாக வழங்கப்படும் அனைத்து திரவ மருந்துகளிலும் இந்நச்சுப் பொருட்களைப் பரிசோதிப்பதைக் கட்டாயமாக்கும் மத்திய மருந்தியல் தரநிலைத் திருத்தங்களின்படி, மாநில மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277455&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2277531) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी