பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படையின் கிழக்குக் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த 'உதயகிரி', 'கவரத்தி' கப்பல்கள் வியட்நாமின் ஹோ சி மின் நகரை சென்றடைந்தன
प्रविष्टि तिथि:
23 JUN 2026 4:08PM by PIB Chennai
தென்கிழக்கு ஆசியப் பிராந்திய செயல்பாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட போர்க்கப்பல்களான 'ஐஎன்எஸ் உதயகிரி' (மறைந்து தாக்கும் திறன் கொண்ட ஃப்ரிகேட் வகை), 'ஐஎன்எஸ் கவரத்தி' (நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புத் திறன் கொண்ட கோர்வெட் வகை) ஆகியவை, 2026 ஜூன் 22 அன்று வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள 'நா ரோங்' துறைமுகத்தைச் சென்றடைந்தன.
கிழக்குக் கடற்படைப் பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தா தலைமையில் பயணம் மேற்கொண்டுள்ள இந்தக் கப்பல்களுக்கு, வியட்நாம் மக்கள், கடற்படை வீரர்கள், ஹோ சி மின் நகர் மக்கள் குழுவின் பிரதிநிதிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி, இரு நாட்டுக் கடற்படைகளுக்கும் இடையேயான நீண்டகால நெருங்கிய நட்புறவு, வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்தப் பயணம் இந்தியக் கடற்படை, வியட்நாம் மக்கள் கடற்படை இடையேயான தொழில்முறை கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், விளையாட்டுப் போட்டிகள், சமூக நலன் சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்விரு நாடுகளின் கடற்படைத் தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளன. இந்த சந்திப்பு பரஸ்பரம் இரு தரப்பு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான வாய்ப்பையும் வழங்குகிறது.
2026, மே மாதத்தில், இருதரப்பு உறவுகள் 'மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் ஒத்துழைப்பு' என்ற நிலைக்கு உயர்ந்துள்ளதையடுத்து, வியட்நாமில் இந்தியக் கடற்படை மேற்கொள்ளும் முதல் முக்கிய பயணம் இதுவாகும்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277010®=3&lang=1
(Release ID: 2277010)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277267)
आगंतुक पटल : 4