சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்வேகம் பெறும் இந்தியாவின் அரியவகை கனிமவள இயக்கம்

प्रविष्टि तिथि: 23 JUN 2026 4:31PM by PIB Chennai

அரியவகை கனிம சுரங்கங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஏல நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதன் மூலம், இந்தியாவின் முக்கிய கனிமப் பாதுகாப்பு, ஆய்வுச் சூழலை வலுப்படுத்துவதில் மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இதனையடுத்து, ஏலம் விடப்பட்டுள்ள முக்கிய கனிமச் சுரங்கங்களின் மொத்த எண்ணிக்கை 56-ஐ எட்டியுள்ளது. இது உள்நாட்டு கனிம விநியோக நடைமுறைகளை  வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் அரியவகைக் கனிமவள இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

மத்திய அரசால் நடத்தப்பட்ட ஏழாவது ஏல நடைமுறைகளின் கீழ், 10 முக்கிய, உத்திசார் கனிமச் சுரங்கங்களை மத்திய சுரங்க அமைச்சகம் வெற்றிகரமாக ஏலம் விட்டது. இதன் மூலம் சுரங்கப் பயன்பாட்டு உரிமத்திற்காக ஏலம் விடப்பட்ட சுரங்கங்களின் மொத்த எண்ணிக்கை 56-ஆக உயர்ந்தது. மத்திய அரசால் ஏலத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 88 தனித்துவ கனிமத் தொகுதிகளில், 56 தொகுதிகள் ஏலம் விடப்பட்டதன் மூலம், 63%-வீதத்தைக் குறிக்கிறது.

குஜராத், உத்தராகண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மத்திய அரசால் முதன்முறையாக முக்கிய கனிம சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டதன் மூலம், இந்தியாவின் முக்கிய கனிமவள ஆய்வுத் துறையின் பரப்பளவு கணிசமாக விரிவடைந்துள்ளது. இந்த ஏலத்தில், கிராஃபைட், அரியவகை மண் தனிமங்கள், வனேடியம், டைட்டானியம், கிளாக்கோனைட், பாறை பாஸ்பேட், அதனுடன் தொடர்புடைய கனிம வகைகள் ஆகியவை அடங்கும். இது நாட்டில் முக்கிய கனிமவள  ஆய்வின் புவிசார் ரீதியிலான வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277041&reg=3&lang=1

(Release ID:2277041)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2277208) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi