வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 மே மாதத்திற்கான 8 முக்கிய தொழில்துறைகள் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUN 2026 5:00PM by PIB Chennai

2026 மே மாதத்திற்கான 8 முக்கிய தொழில்துறைகள் குறியீடு 2025 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.5 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது.  எஃகு, சிமெண்ட், மின்சாரம், ஆகியவற்றின் உற்பத்தி மே 2026-ன் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எஃகு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், உரங்கள், சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த மற்றும் தனித்தனியான செயல்பாட்டை ஐசிஐ அளவிட்டுள்ளது. தொழில் உற்பத்தி குறியீட்டில், சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு இந்த 8 தொழில்துறைகளில் 40.27 சதவீதமாக உள்ளது.

ஏப்ரல் 2026-ல் 8 முக்கிய தொழில்துறைகளில் இறுதி குறியீட்டு வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக இருந்தது. 2026-27 ஏப்ரல் முதல் மே வரையிலான தளத்தில் 8 முக்கிய தொழில்துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 1.1 சதவீதமாக (தற்காலிகமாக) இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276691&reg=3&lang=1

***

SS/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2276828) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Gujarati