வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய வர்த்தக நடைமுறைகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு புதுதில்லியில் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2026 6:00PM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய வர்த்தக நடவடிக்கைகள்; உலக வர்த்தக அமைப்பின் விதிகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் அதன் தாக்கங்கள் என்ற தலைப்பில் மத்திய அரசின் வர்த்தகத்துறை புதுதில்லியில் 2 நாள் தேசிய பயிலரங்கை நடத்துகிறது.
சுற்றுச்சூழல் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய புதிய சவால்கள், இந்திய வர்த்தகம், ஏற்றுமதி போட்டித் தன்மையில் அவற்றின் தாக்கங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
இப்பயிலரங்கு அரசு உயரதிகாரிகள், வர்த்தக நிபுணர்கள், உலக வர்த்தக அமைப்பின் நிபுணர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், பல்வேறு தரப்பு, இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடக்கூடிய பங்குதாரர்களை இணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276745®=3&lang=1
****
TV/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2276794)
வருகையாளர் எண்ணிக்கை : 45