நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் மத்திய நிலக்கரி, சுரங்க அமைச்சகங்கள் இணைந்து பங்கேற்றன

प्रविष्टि तिथि: 21 JUN 2026 2:01PM by PIB Chennai

அதிகாரிகள், ஊழியர்களிடையே முழுமையான ஆரோக்கியம், மனநலம்ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் மத்திய அரசின்  உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், மத்திய நிலக்கரிசுரங்க அமைச்சகங்கள் இணைந்து, புதுதில்லியின் நேதாஜி நகரில் சர்வதேச யோகா தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும், பங்கேற்புடனும் கொண்டாடின. இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம், "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற கருபொருளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த யோகா நிகழ்வில் மத்திய சுரங்க அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் வீணா குமாரி டெர்மல், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. சஞ்சீவ் குமார் காசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இரண்டு  அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், ஊழியர்களும் 2026-ம் ஆண்டிற்கான யோகா தினக் கொண்டாட்டங்களில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

புது தில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தைச் சேர்ந்த யோகா நிபுணர்களான திருமதி நிஷு பண்டூலா அரோரா, திருமதி நிஷிதா ஆகியோர் இந்த யோகா அமர்வை வழிநடத்தினர். உடல் தகுதி, நெகிழ்வுத்தன்மை, மன உறுதி, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு ஆசனங்கள், பிராணாயாமம், தியானப் பயிற்சிக்கான நுட்பங்கள் அடங்கிய 'பொது யோகா நெறிமுறை' குறித்து பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276074&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276365) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Urdu , हिन्दी