நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தவறான விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது
प्रविष्टि तिथि:
21 JUN 2026 3:39PM by PIB Chennai
உணவுப் பொருட்கள் தொடர்பாக "100%" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி வெளியிட்ட தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் திருமதி நிதி காரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பு உறைகள், இணையதளங்கள், அனைத்து டிஜிட்டல் தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உடனடியாக நீக்குமாறும் இவ்விரு நிறுவனங்களுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, 'தவறான விளம்பரங்களைத் தடுத்தல், தவறான விளம்பரங்களுக்கான ஒப்புதல்கள் குறித்த வழிகாட்டுதல்கள், 2022' ஆகியவற்றின் விதிமுறைகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தனையுடன் கூடிய விளக்கத்தை அனுமதிக்கும் சட்டரீதியான வரையறை ஏதுமில்லாத நிலையில், ஒரு சாதாரண நுகர்வோர் இச்சொல்லை அதன் நேரடி, சாதாரண அர்த்தத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276133®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2276339)
आगंतुक पटल : 9