பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷில்லாங்கில், 1,000 வீரர்களுடன் யோகா அமர்வில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUN 2026 12:01PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 21, 2026) மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள கிழக்குப் பிரிவு விமானப்படை தலைமையகத்தில், இந்திய விமானப்படை, ராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களுடன் பல்வேறு ஆசனங்கள், சுவாசப் பயிற்சிகளைச் செய்து, சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங், விமானப்படையின் கிழக்குப் பிரிவு  தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா ஆகியோரும் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் யோகா பயிற்சி செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், யோகாவை ஒரு முழுமையான அறிவியல் என்றும், அது தனிநபர்களை அவர்களின் உள்மனதுடனும், சமூகத்துடனும், இயற்கையுடனும், இறுதியில் தெய்வீகத்துடனும் இணைக்கிறது என்றும் கூறினார். யோகா அக உறுதித்தன்மை, மனத்தெளிவு, உணர்ச்சி ரீதியான திறன் ஆகியவற்றுக்கான ஒரு பாதையை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் யோகா தின நிகழ்வில் பங்கேற்றார். நேர்மறை ஆற்றலை வளர்ப்பதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஊடகம் யோகா என்று அவர் குறிப்பிட்டார்.

புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு முப்படைகளின் தளபதி என்.எஸ். ராஜா சுப்ரமணி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மூத்த அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்புத் துறை நிதிப் பிரிவுச் செயலாளர் திரு விஸ்வஜித் சஹாய், பாதுகாப்பு கணக்குகள் தலைமை கட்டுப்பாட்டாளர் திரு அனுக்கிரக நாராயண தாஸ் ஆகியோர், பிற மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, புது தில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை கணக்குகள் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் யோகா அமர்வில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275985&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2276286) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu