ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கடமை மாளிகையில் சர்வதேச யோகா தினம், உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2026 12:48PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள கடமை மாளிகை 03-ல், ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச யோகா தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை உள்துறை அமைச்சகம், நில வளங்கள் துறை, ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, வெளியுறவு அமைச்சகம், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் நில வளங்கள் துறை செயலாளர் திரு. நரேந்திர பூஷன், இணைச் செயலாளர் திரு. பி. நரஹரி, பொருளாதார ஆலோசகர் திரு. பி. அப்துல் கரீம் உள்ளிட்ட பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆரோக்கியமான வாழ்வியல் முறை, முழுமையான நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
யோகா பயிற்றுநர்கள், பங்கேற்பாளர்களுக்குப் பல்வேறு யோகாசனங்களைச் செய்து காட்டியதுடன், அவற்றைச் சரியாகச் செய்வது குறித்தும் எடுத்துரைத்தனர். உடல் தகுதி, மன நலம், மன அழுத்த மேலாண்மை, ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் ஆகியவற்றிற்கு யோகா குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது குறித்து இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம், சமச்சீரான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவிடுவதுடன், அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதற்கும், ஆரோக்கியமான, வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கவும் உதவிடும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வரும் நில வளங்கள் துறை, ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளின் அடிப்படையில், இன்று சிவாஜி மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276011®=3&lang=1
****
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2276140)
வருகையாளர் எண்ணிக்கை : 49