பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படைக்காக 1.25 மெகாவாட் கடல்சார் எரிவாயு உற்பத்திக்கான கருவிகளை பாதுகாப்பு அமைச்சகம் கொள்முதல் செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUN 2026 5:26PM by PIB Chennai
குறைந்தபட்சம் 60 சதவீதம் உள்நாட்டுத் தயாரிப்புடன் கூடிய 1.25 மெகாவாட் கடல்சார் எரிவாயு உற்பத்திக்கான கருவிகளை கடற்படைக்காக ரூ.425 கோடி மொத்த செலவில் கொள்முதல் செய்வதற்காக, புனேவைச் சேர்ந்த பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், ஜூன் 19, 2026 அன்று புது தில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், 'கொள்முதல் (இந்திய)' பிரிவின் கீழ் கையெழுத்திடப்பட்டது.
இந்தத் திட்டம், ஒரு வலுவான உள்நாட்டு உற்பத்திச் சூழலை உருவாக்குவதன் மூலம், தற்சார்பு இந்தியா, 'மேக்-இன்-இந்தியா' போன்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் தொழில்நுட்பங்களில் கடல்சார் தற்சார்பு நிலையை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு உற்பத்தி, முழுமையான ஆயுள் சுழற்சி மூலம் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்த உதவிடும்.
கடல்சார் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான உள்நாட்டுத் திறனை நிறுவுவதில் இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது. நவீன கடற்படைப் போர்க்கப்பல்களில், முக்கியப் போர் அமைப்புகள், மேம்பட்ட ஆயுதங்கள், தொலையுணர் சாதனங்களுக்கு ஆற்றலளிக்கும் மின் உற்பத்திப் பயன்பாடுகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2275277®=3&lang=1
(Release ID: 2275277)
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2275727)
வருகையாளர் எண்ணிக்கை : 51