இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கவுள்ளார்

प्रविष्टि तिथि: 20 JUN 2026 3:40PM by PIB Chennai

நாட்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான 12-வது சர்வதேச யோகா தினம், நாளை (21.06.2026) நடைபெறுகிறது. இதனையொட்டி புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் மாபெரும் யோகா அமர்வுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கவுள்ளார். இதில் நடிகரும் உடற்பயிற்சி ஆர்வலருமான அக்ஷய் குமார் உட்பட 3000 பேர் பங்கேற்கவுள்ளனர்.

 

இது தவிர யோகா நிகழ்வானது, இந்திய விளையாட்டு ஆணையத்தின் அனைத்து மண்டல மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா மையங்கள் ஆகியவற்றில் விளையாட்டு அமைச்சகத்தால் நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதில் நாடு தழுவிய அளவில் 15,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள், மாநில விளையாட்டுத் துறைகள், விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள், பலவற்றாலும் ஒரே நேரத்தில் யோகா நிகழ்வுகள் நடத்தப்படும்.

 

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தக் கொண்டாட்டமானது, விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், யோகா பயிற்சி செய்பவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோரை ஒன்றிணைத்து, யோகாவின் சக்தியை ஒரு கூட்டு செயல்விளக்கமாக வெளிப்படுத்தும்.

 

கடந்த பத்தாண்டுகளில், சர்வதேச யோகா தினம் உலகின் மிகப்பெரிய நல்வாழ்வு இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. நாளை நடைபெறும் 12- வது சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய கொண்டாட்டங்களில், 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275640&reg=3&lang=1

(Release ID: 2275640)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2275719) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam