பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை போர்க்கப்பல்களை ஜூன் 21 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
प्रविष्टि तिथि:
19 JUN 2026 4:57PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க்கப்பல்களான துணகிரி, சன்சோதக், அக்ரே ஆகியவற்றை வரும் ஜூன் 21 அன்று கொல்கத்தாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் இந்தக் கப்பல்கள் தயரிக்கப்பட்டுள்ளன. கடல் வழி போர், நீரியல் ஆய்வு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் செயல்பாடுகள் ஆகியவற்றில் இந்த கப்பல்கள் முக்கியப் பங்காற்றவுள்ளன. கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இவை பெரிதும் உதவும்.
புராஜெக்ட் 17ஏ-ன் கீழ் ஐந்தாவது அதிநவீன ரகசிய போர்க்கப்பலான 'துணகிரி', பிரம்மோஸ் ஏவுகணைகள், நடுத்தர தொலைவு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளுடன் கடற்படையின் போர் திறனை அதிகரிக்கும். நான்காவது பெரிய ஆய்வுக்கப்பலான 'சன்சோதக்', கடலோர, ஆழ்கடல் நீரியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்னாலா பிரிவின் நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'அக்ரே', இலகுரக டார்பிடோக்கள், உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் கடற்பகுதியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்.
இந்த மூன்று கப்பல்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்நாட்டுப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்டு, நாட்டின் கப்பல் கட்டுமானத் துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. இதன் கட்டுமானத்தில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கங்களை வலுப்படுத்துவதில் மத்திய அரசு, பொதுத்துறை, தனியார் தொழில்துறையினரின் கூட்டு முயற்சியை இந்தக் கப்பல்கள் வெளிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275247®=3&lang=1
***
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2275668)
आगंतुक पटल : 6