நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தக ரீதியில் நிலக்கரியிலிருந்து அமோனியம் நைட்ரேட் தயாரிக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUN 2026 12:50PM by PIB Chennai

நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், தொழில்துறையில் தன்னிறைவு அடைவதை விரைவுப்படுத்துவதற்கும் ஏதுவாக ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் லக்கன்பூரில் 25,016 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (20.06.2026) அடிக்கல் நாட்டுகிறார். 

முக்கிய மூலப்பொருட்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையில், இத்தகைய முன்முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முதன் முறையாக இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த வாயுவாக்கல் நடைமுறை மூலம் நிலக்கரியை தொகுப்பு வாயுவாக மாற்ற உதவுகிறது. இந்த வாயுவின் உதவியுடன் மெத்தனால், யூரியா, அமோனியம் நைட்ரேட், செயற்கை, இயற்கை எரிவாயு, இதர வேதியியல் மூலப்பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275058&reg=3&lang=1  

***

TV/SV/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2275341) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu