பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப் படையின் மத்தியப் பிரிவு தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் தருண் சவுத்ரி பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 01 JUN 2026 4:37PM by PIB Chennai

ஏர் மார்ஷல் தருண் சவுத்ரி 2026 ஜூன் 1 அன்று இந்திய விமானப் படையின் மத்தியப் பிரிவு தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1989 டிசம்பரில் இந்திய விமானப்படையின் போர்விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரி, விமானப் போர் கல்லூரி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான இவர், தனது சிறந்த சேவைக்காக ஏவிஎஸ்எம் மற்றும் விஎஸ்எம் விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனது நீண்ட காலப் பணியில், சுவீடனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். நார்வே, பின்லாந்து, டென்மார்க் நாடுகளுக்கான கூடுதல் பொறுப்புகளையும் இவர் கவனித்து வந்தார். மேலும், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம் ஆகியவற்றில் திட்டங்கள், கொள்முதல், மனிதவள மேலாண்மைத் துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் திறன் மேம்பாடு, எதிர்காலத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல மாற்றத்தக்க திட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த புதிய பொறுப்பை ஏற்கும் முன்பு, தெற்கு விமானப்படை கமாண்டின் மூத்த விமானப்படை அதிகாரியாக இவர் பணியாற்றினார். 40 ஆண்டுகள் நாட்டிற்குச் சிறப்பான சேவை ஆற்றி 2026 மே 31 அன்று பணி ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டனுக்குப் பதிலாக ஏர் மார்ஷல் தருண் சவுத்ரி தற்போது இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

***

(Release ID: 2267533)
SS/EA/RJ


(रिलीज़ आईडी: 2275241) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil