ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-27 நிதியாண்டில் 26,000 கி.மீ-க்கும் அதிகமான கிராமப்புறச் சாலைப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUN 2026 10:34AM by PIB Chennai

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், அது தொடர்பான கிராமப்புற இணைப்பு முயற்சிகளின் கீழ், 26,474 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளை அமைப்பதற்காக, மத்திய அரசு 2026-27 நிதியாண்டில் ரூ. 18,907 கோடி ஒதுக்கியுள்ளது.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்புத் திட்டம்  ஆகியவற்றின் கீழ் மாநில வாரியான கட்டுமானம், நிதி ரீதியான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் கூட்டப்பட்ட ஒரு விரிவான உயர் நிலை ஆய்வுக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமை தாங்கினார்.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான்,தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மாநில ஊரகச் சாலைகள் மேம்பாட்டு முகமைகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274391&reg=3&lang=1  

***

SS/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2274846) வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , Bengali-TR , English , Urdu , Marathi , हिन्दी